"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" பாட்டுப்பாடி வைரலான பள்ளிச் சிறுவன்..! வீடியோ.

  • IndiaGlitz, [Thursday,February 27 2020]

சமூகவலைதளங்களைப் பொறுத்தவரை எது வைரலாகும் என்று யூகிக்கவே முடியாது. அது சில சமயம் மகிழ்ச்சி தரலாம், மனம் உருக வைக்கலாம், பதர வைக்கலாம், அழ வைக்கலாம் இப்படி எதுவாகவும் இருக்கலாம். எதுவாயினும் அன்றைய நாள் முழுவதும் சமூக வலைதளங்களையெ ஆட்டிப்படைத்து பேசு பொருளாக்கும்.

அந்த வகையில் இன்று ட்விட்டர் பக்கத்தில் சிறுவன் பள்ளி அறையில் பாடும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. 1962-ம் ஆண்டு சந்திரபாபு, ரங்காராவ், சவுகார் ஜானகி நடிப்பில் வெளியான படம் அன்னை. இந்த படத்தில் சந்திரபாபு பாடிய புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ற பாடல் இன்றளவும் பலராலும் விரும்பப்படும் பாடலாக உள்ளது. இந்த பாடலை பால்மனம் மாறாத அந்தச் சிறுவன் பள்ளி சீருடையில் அச்சுபிசகாமல் பாடி பலரையும் வியக்கவைக்கிறார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7-இல் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். கடந்த வாரம் தொடங்கப்பட்ட இந்த சீசன் 7-இல் இரண்டாவது போட்டியாளராகப் பாடி நடுவர்கள் மட்டுமல்லாது அரங்கில் அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. வேலூர் தனியார் பள்ளியில் நடந்த கொடூரம்..!

அதே சமயம், பள்ளிக் கழிவறையில் மாணவிக்கு நடந்த கொடூரத்துக்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் Galaxy M31..ரூ.15000 க்கு என்னென்ன specifications?!

இந்தியாவில் Samsung Galaxy M31-ன் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு ரூ.15,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.16,999 விலையுடன் வருகிறது.

டெல்லி வன்முறையை பற்றி ட்ரம்ப் ஏன் வாயே திறக்கவில்லை !? பெர்னி சாண்டர்ஸ்.

டெல்லி வன்முறைச் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

டி-20 உலகக்கோப்பை.. அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி..!

ஐசிசி மகளிர்  டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை சந்தித்த இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

"பாஜக பேரணி..பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்"..! திருப்பூர் காவல் நிலையத்தில் மனு.

பாஜக பேரணியின்போது பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டி திருப்பூர் காவநிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.