ஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு? அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Saturday,February 27 2021]

மாகாராஷ்டிரா மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்காக இயக்கப்பட்டு வந்த உண்டு உறைவிட பள்ளி ஒன்றில் படித்து வந்த 98 மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் 4 ஆசிரியர்களும் அடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி முதல் பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வஷிம் மாவட்டத்தில் உள்ள பாவனா பப்ளிக் உண்டு உறைவிட பள்ளிக்கு அதில் படித்து வந்த 5-9 வகுப்பு மாணவர்கள் அனைவரும் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வருகை தந்து உள்ளனர். ஏற்கனவே மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக்கு வரும் அனைத்து மாவணர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் முதற்கட்டமாக 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பள்ளிக்கு வந்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் 229 மாணவர்களுக்கு அறிகுறியே இல்லாத கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் நெகட்டிவ்வாக இருந்த 98 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறித்து அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அப்பளிக்கே சென்று 4 மருத்துவக் கண்காணிப்புக் குழு மாணவர்களுக்கு சிகிச்சையும் அளித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் 151 பேர் அம்ராவதி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 55 பேர் யவத்மல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8,807 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. இதுவரை அம்மாநிலத்தின் 7 அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.