'வாரிசு' படத்திற்கு மாணவர்களை அழைத்து சென்ற ஆசிரியர்கள்: பள்ளி நிர்வாகம் விளக்கம்!

  • IndiaGlitz, [Sunday,January 29 2023]

பள்ளி மாணவர்களை விஜய் நடித்த வாரிசு படத்தை பார்க்க ஏற்பாடு செய்த நிலையில் இது குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

விஜய் நடித்த வாரிசு திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் 200 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அம்மா, அப்பா மற்றும் கூட்டு குடும்பம் செண்டிமெண்ட் கொண்ட ஒரு கதையம்சம் கொண்ட படமாக இருந்ததால் இந்த படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக தியேட்டரை நோக்கி சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் வாரிசு திரைப்படத்தை பார்க்க பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறிய போது 'கூட்டு குடும்பத்தின் பெருமையையும், உறவுகளை மேன்மையையும் இளைய தலைமுறைகளுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்களுக்கு இந்த படத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது என விளக்கம் அளித்தது.

மாணவர்களுக்கு இளம் வயதிலேயே கூட்டுக் குடும்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் வாரிசு படத்துக்கு மாணவர்களை அழைத்துச் சென்றது குறித்து விஜய் ரசிகர்கள் அந்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More News

சிவகார்த்திகேயன், சந்தானத்துடன் போட்டியா? ஆர்ஜே பாலாஜி விளக்கம்

சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகியோர்களுடன் போட்டியா? என்ற கேள்விக்கு நடிகர் ஆர்ஜே பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இளம் வயதில் உயிரிழந்த ரசிகர்.. நேரில் சென்று அஞ்சலி செய்த கார்த்தி!

 நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் இளம் வயதில் மரணமடைந்ததை அடுத்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

'வாடிவாசல்' படத்தில் இணைந்த 'அவதார்' படக்குழுவினர்.. வேற லெவல் தகவல்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் ஆக வெளிவந்த தகவல் பெறும் ஆச்சரியத்தை

ரஜினியின் பெயர், புகைப்படம், குரல்: வழக்கறிஞரின் எச்சரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை வணிக ரீதியிலான நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது என அவரது வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு

3 வாரத்தில் ரூ.300 கோடியை நெருங்கு வசூல்.. 'வாரிசு' படக்குழுவினர் குஷி!

பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதி வெளியான தளபதி விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று குடும்பங்கள் போற்றும் வெற்றி படமாக அமைந்துள்ளது.