தனுஷ்-செல்வராகவன் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர்!

தனுஷ் நடித்து முடித்துள்ள ’பட்டாஸ்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து அவர் ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படமும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தனுஷின் சகோதரரும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை உறுதி செய்வது போல் தற்போது இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தனுஷ்-செல்வராகவன் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.

தற்போது இந்த படத்தின் திரைக்கதையை எழுதும் பணியில் செல்வராகவன் இருப்பதாகவும் இந்த பணியை அவர் முடித்த பின்னர் நட்சத்திரங்கள் தேர்வு, லொகேஷன் தேர்வு மற்றும் ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விடுவார் என்றும் அநேகமாக அடுத்த வருடம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி

டிக்டாக் வீடியோவில் அக்கா-தங்கையின் நிர்வாண படங்கள்: 12ஆம் வகுப்பு மாணவன் கைது

உத்தரபிரதேச மாநிலத்தில் அக்கா, தங்கை என இரண்டு பெண்களின் புகைப்படங்களை நிர்வாணமாக சித்தரித்து டிக்டாக் வீடியோவாக பதிவு செய்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார்த்தியின் அடுத்த பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி

கார்த்தி மற்றும் ஜோதிகா முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் ஒன்றை மலையாள இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து

மனைவியின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்த கணவன் கைது!

சென்னையை அடுத்த செங்கல்பட்டு பகுதியில் மதன், காஞ்சனா ஆகிய இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர்

நீங்க வேற லெவல் பவி டீச்சர்: 'தளபதி 64' நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் முடிவடைந்த நிலையில்,