டி இமான் இசையில் பாட்டு பாடிய பிரபல இசையமைப்பாளர்.. சந்தானம் படத்தில் நடந்த ஆச்சரியம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரையுலகில் ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்தில் மற்ற இசையமைப்பாளர்கள் பாடும் பாடல்கள் இடம் பெறுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகமாகி வருகிறது.
ஏஆர் ரகுமான், அனிருத், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பில் மற்ற இசையமைப்பாளர்கள் பாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது டி. இமான் இசையமைக்கும் படத்தில் பிரபல இசையமைப்பாளர் சீன் ரோல்டான் பாடல்களை பாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை டி இமான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தானம் நடிப்பில் ஆனந்த் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை தான் சீன் ரோல்டான் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல்களை டி இமான் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
’எம்புட்டு இருக்குது ஆசை’, ’உன்ன விட்டா யாரும் எனக்கில்லை’ மற்றும் ’தங்கமே’ ஆகிய பாடல்களை சீன் ரோல்டான் பாடிய உள்ளதாகவும் அவருக்கு தனது நன்றி என்றும் டி.இமான் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சந்தானம் நடித்த ’கிக்’ என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments