மூன்று மாதங்களுக்கு சிலிண்டர் இலவசம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

பாரதப் பிரதமர் மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணம் இன்றி சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது இந்த திட்டத்தால் தமிழகத்தில் உள்ள 30 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதம் ஒரு சிலிண்டர் வீதம் மூன்று சிலிண்டர்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்றும், இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், சிலிண்டர் கொண்டு வரும் நபரிடம் சிலிண்டருக்கான தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் அவர்களது வங்கி கணக்கில் அவர்கள் செலுத்திய தொகை முழுவதுமாக டெபாசிட் செய்யப்படும் என்றும் இந்தியன் ஆயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இதற்குமுன் மானிய தொகை மட்டுமே வங்கியில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு சிலிண்டருக்கான முழு தொகையும் டெபாசிட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முன்பதிவு செய்த பயனாளிகளும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது. மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

More News

LPG  கேஸ் சிலிண்டர் விலையில் ரூ. 65 வரை குறைப்பு!!!

மத்திய அரசு ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு 12 LPG கேஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்கிவருகிறது.

கிருமி நாசினி சுரங்கம் கட்டிய கலெக்டர்: குவியும் பாராட்டுக்கள்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வெளியே வந்து கொண்டுதானிருக்கின்றனர்.

போதையில் இருந்து மீண்டது எப்படி? 'தலைவி' பட நாயகி பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கங்கனா ரணாவத், தான் சிறுவயதில்

கொரோனா பரவல்; உடலுறவு கொள்வது பாதுகாப்பனதா??? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்???

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில் பலநாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது

பாடி பாலத்தில் கடுமையான டிராபிக்: திருந்தாத சென்னை மக்கள்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்ததை அடுத்து சென்னையில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர்