close
Choose your channels

சாண்டி மாஸ்டரின் இரண்டாவது குழந்தை: வைரல் வீடியோ

Friday, July 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரையுலக நடன இயக்குனருமான சாண்டி மாஸ்டருக்கு இரண்டாவது குழந்தை பிறந்து உள்ள தகவலை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் சாண்டி மற்றும் சில்வியா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் அந்தப் பெண் குழந்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சாண்டி மாஸ்டரின் மனைவி மீண்டும் கர்ப்பிணியாக இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. சமீபத்தில் சாண்டி மாஸ்டர் மனைவி தனது பிறந்தநாளை கொண்டாடிய போது கூட உள்ள புகைப்படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’எங்கள் வீட்டின் ராஜா பிறந்து உள்ளார், எனது கண்ணம்மாவுக்கு மிகுந்த அன்புகள்’ என பதிவு செய்துள்ளார். மேலும் குழந்தையின் கை சாண்டியின் விரலை பிடித்தவாறு இருக்கும் புகைப்படங்களை கொண்ட வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களுக்கு நடனம் அமைத்து மட்டுமின்றி தற்போது சாண்டி மாஸ்டர் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘3:33’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார் என்பதும், இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.