சாண்டி மாஸ்டரின் இரண்டாவது குழந்தை: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Friday,July 23 2021]

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரையுலக நடன இயக்குனருமான சாண்டி மாஸ்டருக்கு இரண்டாவது குழந்தை பிறந்து உள்ள தகவலை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் சாண்டி மற்றும் சில்வியா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் அந்தப் பெண் குழந்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சாண்டி மாஸ்டரின் மனைவி மீண்டும் கர்ப்பிணியாக இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. சமீபத்தில் சாண்டி மாஸ்டர் மனைவி தனது பிறந்தநாளை கொண்டாடிய போது கூட உள்ள புகைப்படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’எங்கள் வீட்டின் ராஜா பிறந்து உள்ளார், எனது கண்ணம்மாவுக்கு மிகுந்த அன்புகள்’ என பதிவு செய்துள்ளார். மேலும் குழந்தையின் கை சாண்டியின் விரலை பிடித்தவாறு இருக்கும் புகைப்படங்களை கொண்ட வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களுக்கு நடனம் அமைத்து மட்டுமின்றி தற்போது சாண்டி மாஸ்டர் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘3:33’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார் என்பதும், இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மனைவி குழந்தைகளுடன் அல்லு அர்ஜூன் சென்ற இடம்: வைரல் வீடியோ!

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் என்பதும் தற்போது அவர் நடித்து வரும் 'புஷ்பா' என்ற திரைப்படத்திற்கு

உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறதா? கண்டுபிடிப்பது எப்படி?

பெகாசஸ் எனும் சாஃப்ட்வேர் மூலம் மத்திய அரசு பத்திரிக்கையாளர்கள் மற்றும் அமைச்சர்களின் செல்போன்களை வேவு பார்க்கிறது

நாம் இறந்த பிறகு எங்கே போகிறோம்? ஜோதிடர் கூறும் ஆச்சர்யத் தகவல்கள்!

ஒரு மனிதன் கை, கால்களை அசைத்துக் கொண்டு, சாப்பிட்டு உயிர்வாழ்வதற்கு அடிப்படை காரணமாக இருப்பது எனர்ஜி.

நள்ளிரவில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' செகண்ட்லுக்!

பிரபல நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து நேற்று மாலை அவர் நடித்துவரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் 'எதற்கும் துணிந்தவன்' என்று அறிவிப்பு வெளியானது

நிஜமான டான்சிங் ரோஸ் இவர்தான்: இதோ வீடியோ!

பாக்ஸிங் சண்டை படமான 'சார்பாட்டா பரம்பரைதிரைப்படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரில் நடித்து இருந்த சபீர் கலக்கலாக நடித்து இருப்பார் என்பதும் ஒரு கட்டத்தில் இவர் ஆர்யாவின் நடிப்பையே மிஞ்சி விடுவார்