ஆணவ கொலைக்கு பலியான சங்கரின் மனைவி கவுசல்யாவின் 2வது திருமண நாள் கவிதை

  • IndiaGlitz, [Wednesday,July 12 2017]

21ஆம் நூற்றாண்டின் டெக்னாலஜி காலத்திலும் இன்னும் சாதி மோதல்கள், ஆணவக்கொலை, கெளரவக்கொலை ஆகியவை ஆங்காங்கே நடந்து வருவது மனித குலத்திற்கே ஒரு இழுக்காக கருதப்படுகிறது. குறிப்பாக காதலால் ஒன்றிணைந்த தம்பதியர்களை சாதி என்னும் வெறி காரணமாக கெளரவக்கொலை என்ற பெயரில் வெட்டி வீழ்த்தும் கயவர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். இந்த கெளரவ கொலையால் வாழ்க்கையை தொலைத்த பலரில் ஒருவர் கவுசல்யா.

திருப்பூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்தவர். ஆனால் திருமணம் ஆன ஒருசில நாட்களீல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் சாதி தீவிரவாதிகளால் வெட்டி வீழ்த்தப்பட்டனர். இதில் கவுசல்யா படுகாயத்துடன் உயிர் பிழைக்க, சங்கர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் இன்று சங்கர்-கவுசல்யாவின் இரண்டாம் ஆண்டு மண நாளை அடுத்து கவுசல்யா தனது ஃபேஸ்புக்கில் நெகிழ்ச்சி தரும் கவிதை ஒன்றின் மூலம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இதுதான் அந்த கண்ணீர் கவிதை. இதை படித்த பின்னராவது சாதி என்னும் கொடிய நோய் பிடித்தவர்கள் குணமாகட்டும்.

இந்நாள்!

அம்மாவின் சாயலைக் கொண்டவளென்று-எம்மைக் கண்டதும் கூறினாய்!

அதற்கு நான்,

பொதுவான வார்த்தைகளிட்டு-பொருத்தமாக இருக்காதென்றேன்.

நீ கண்ணியமாக-என்னைவிட்டு கலைந்து சென்றாய்!

"சிறு இடைவெளியோடு"

மறுமுறை உனதுபேச்சு- "மன்னிப்பிலிருந்தது"

நீ தவறு செய்துவிட்டாய்-என்பதற்காக "அல்ல"

நான் உனது - "தாய்மை" எண்ணத்தை -"தவறாக" -நினைத்திடாது இருப்பதற்கா!

நீகடந்த

அந்நிமிடமே தாமதம்-இன்றும் காரணமில்லை-"என்னிடம்"

உனது நினைவிற்கு மாறாகத்தான்-நினைத்தேன்.

உண்டான இடைவெளியை-நமக்குள்-ஏனின்னும் உடைக்கவில்லையென்று!

கல்லூரி நண்பன்-என்றெனது-காதல் கணவனாவான் -எனநினைத்தேன்!

நாம் நினைத்தது-நிறைவேறியது-நாம்

நினைத்தவைகள்-நிறைவேறவில்லை!

நமது காதல்-நாமறிந்து-

பாராட்டிக்கொண்டபோது

நமது காதலை - எமது வீடறிந்து விட்டது.

"சாதி-சனத்தை" மனதில் நிறுத்தி

வழக்கம்போல்-எம்மைப் பெற்றவர்கள்-தன்வேலை பார்கையில்!

நமக்கான- கால இடைவெளி ஏதுமின்றி-இரு கரம்கோர்த்தோம்.

சாதியையும் உடைத்தோம்!

உடைந்த சாதியை-இணைக்க "எண்ணி"

எண்ணற்ற கனவுகளோடு-

எதிர்காலம் நோக்கி

ஊடலும்,கூடலுமின்றி-இணைந்திருந்த நம்மை,

பிரித்து வைத்துவிட்டார்கள்-மரணப்பரிசு கொடுத்து.

உன்னை-எம்மிடமிருந்து-என்னை உம்மிடமிருந்து.

ஆனால்?

நமது மனமும்-மனதின் நினைவும்-எவராலும்- பிரித்திட இயலாதவையடா

எனது மனவாளா!

ஈருயிராக இருந்தது இன்று-ஓருயிராகிவிட்டது.

சாதியைச் - சவக்குழியேற்றுவேனென்று

உன்மேல் உறுதியெடுத்துக்-கூறுகிறேன்.

இன்று நமது இரண்டாமாண்டு-

"மணநாளடா"

More News

கமல்-ரஜினி நாயகியுடன் நடிக்கும் பார்த்திபன்

உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த  80களின் கனவு நாயகி ஜெயப்ரதா மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு தமிழ் படத்தில் நடிக்கின்றார்...

உதயநிதி-பிரியதர்ஷன் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படம் ஒன்றின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது...

குடும்பக்கட்டுப்பாடு செய்தால் 4G ஸ்மார்ட்போன்: அரசின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போகிறது. இப்படியே போனால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் வந்துவிடும்போல் தெரிகிறது...

பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை: பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியவுடன் அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய நேற்று சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் கொண்ட குழு நேர்காணல் நடத்தியது.

இன்று சென்னையில் 1000% மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வந்தது. நிலத்தடி நீர் இல்லாமல் குடிநீர் தேவைக்கே மக்கள் திண்டாடி வரும் நிலையில் நேற்று முன் தினம் இரவு சென்னையில் நல்ல மழை பெய்து பூமியை குளிர வைத்தது