சென்னை மெரீனா தடை உத்தரவு வாபஸ். காவல்துறை அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,February 05 2017]

சென்னை மெரீனாவில் சமீபத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சிப்போராட்டத்தின் கடைசி தினத்தன்று ஒருசில சமூக விரோதிகளால் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையால் மெரீனாவை சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. காவல்நிலையம் உள்பட பல இடங்களில் சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இந்த பகுதியில் வன்முறை நிகழாமல் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி காவல்துறை 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது மெரீனா உள்பட அனைத்து பகுதிகளிலும் அமைதி திரும்பியுள்ளதால் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மெரீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய தயங்கியவர்கள் இனி தைரியமாக செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கேரள சூர்யா ரசிகர்களின் போலீஸ் புகார்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. முதல் இரண்டு பாகங்கள் நல்ல வெற்றியை பெற்றதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

'பைரவா' படக்குழுவுக்கு இளையதளபதியின் இனிய பரிசு

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளிவந்து திருப்திகரமான வசூலை தந்து கொண்டிருக்கின்றது. கலவையான விமர்சனம், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றையும் மீறி விநியோகிஸ்தர்களுக்கு லாபம் தந்த படங்களில் ஒன்றாக ''பைரவா' இருந்ததால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்...

வேட்புமனு தாக்கல் செய்தவுடன் விஷாலின் அதிரடி அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவை அடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விஷாலின் மன்னிப்பை ஏற்று சஸ்பெண்டை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். சஸ்பெண்ட் ரத்து செய்த சில நிமிடங்களில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக விஷால் அறிவித்தார்.

சசிகலா முதல்வர் ஆனபின் பொறுக்கிகளை அடக்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி

ஜல்லிக்கட்டு பிரச்சனை உச்சத்தில் இருந்த போது பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழர்களை தனது சமூக வலைத்தளத்தில் 'பொறுக்கி' என்று கூறி இழிவுபடுத்தினார்.

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் தோனி மனைவிக்கு தொடர்பா?

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு ஒன்றில் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது