close
Choose your channels

ஜோதிகாவின் இரட்டை சகோதரிகள் யார் தெரியுமா?

Friday, November 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது. தீபாவளி கழித்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவின் இரட்டை சகோதரிகளாக உண்மையான இரட்டை சகோதரிகளான சீமாதனேஜா மற்றும் சிந்து சேகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இதே இரட்டை சகோதரிகள் தான் 'துமாரி சூளு' படத்தில் வித்யாபாலனுக்கும் சகோதரிகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'துமாரி சூளு' படத்தின் தமிழ் ரீமேக் படம் தான் 'காற்றின் மொழி' என்பது தெரிந்ததே

ரேடியோ ஆர்ஜேவாக ஜோதிகா நடித்திருக்கும் இந்த படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஒரு சிறு கேரக்டரில் யோகிபாபுவும் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனார். 'மொழி', 'அபியும் நானும்' உள்பட பல தரமான படங்களை இயக்கிய ராதாமோகன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.