'கோபம்' டைட்டில் ஏன்? சீமான் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,June 03 2017]

பிரபல இயக்குனர் சீமான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆகி இயக்கவுள்ள திரைப்படம் 'கோபம்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நாயகான நடிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு 'கோபம்' என்ற டைட்டில் ஏன்? பொதுவாக சீமான் அரசியல் கூட்டங்கள் அனைத்திலும் சமுதாயத்தில் உள்ள அவலங்கள் குறித்து கோபமாக ஆக்ரோஷமாக பேசுவார் என்பது தெரிந்ததே. எனவே இந்த படத்திற்கு 'கோபம்' என்ற டைட்டில் ஏன் என்று சீமான் பேட்டி ஒன்றில் கூறியதாவது:

சமுதாயத்தின்மீது தனி மனிதர்கள் காட்டும் கோபம்தான் இந்தப் படம். அன்றாட வாழ்க்கையில் பல கோபங்களைக் கடந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தவறு செய்கின்ற மனிதர்கள் மீதான கோபம், ஆளத் தெரியாத அரசின் மீதான கோபம் என ஒவ்வொரு நாளும் விதவிதமான கோபங்கள் மக்கள் மத்தியில் உருவாகிறது. 'தண்ணீரை வீணாக்காதீர்கள்' என்று லாரியில் எழுதப்பட்டிருக்கும். ஆனால், அந்தத் தண்ணீர் லாரியே ஊர் முழுக்க நீரை வீணடித்துக்குக் கொண்டே செல்லும். அதைப் பார்க்கும் மக்களுக்குக் கோபம் வரும் இல்லையா? இப்படி மக்கள் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளும் அதன் வெளிப்பாடாக மக்கள் காட்டும் கோபமும்தான் இந்த படம் என்று கூறினார்.

More News

இயக்குனர் பாலாஜி மோகனின் சஸ்பென்ஸ் தகவல் இதுதான்

கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு 'மாரி' இயக்குனர் பாலாஜி மோகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மாலை வெளியிடவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார் என்பதை பார்த்தோம். 'மாரி 2' திரைக்கதையை அவர் எழுதி கொண்டிருப்பதால் இந்த தகவல் 'மாரி 2' குறித்ததாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது...

தனுஷ்: இளவயது ராஜ்கிரணை அடுத்து இளவயது ரஜினி?

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பவர்பாண்டி' திரைப்படம் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் பவர்பாண்டி கேரக்டரில் நடித்த ராஜ்கிரணின் இளவயது கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே...

ஸ்பைடர்: டீசரில் பெற்ற வெற்றியை திரையிலும் பெறுமா?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்பைடர்' திரைப்படம் வரும் தசரா திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது...

தியாக செம்மல் தினகரனே வருக வருக! அப்ப காந்தி, காமராஜர் எல்லாம் யார்?

சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையனை எதிர்த்து சிறை சென்ற காந்தி, காமராஜர் போன்ற தியாக செம்மல்கள் விடுதலையானபோது கூட இந்த வரவேற்பு இருந்திருக்குமா? என்பது சந்தேகம் தான்...

சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் எப்போது?

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக பதவி உயர்வு பெற்ற சந்தானம் 'தில்லுக்கு துட்டு', 'இனிமே இப்படித்தான்' போன்ற படங்களை அடுத்து தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சர்வர் சுந்தரம். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது சென்சாருக்கும் அனுப்பியாகிவிட்டது...