சீமான் அவர்களின் தந்தை காலமானார்....! பாரதிராஜா இரங்கல்...!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கட்சித்தலைவருமான சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் இன்று  காலமானார்.

சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள தனது வீட்டில், உடல்நிலைக்குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.இத்தகவலை நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள்


மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!
என பதிவிட்டுள்ளனர்.

செந்தமிழன் அவர்களின் இறப்பிற்கு அரசியல் பிரமுகர்கள், கட்சித்தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குனர் பாரதிராஜா டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,
என் பிள்ளை சீமானைப் பெற்றெடுத்த தந்தை திரு.செந்தமிழன் அவர்களின் மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் பிள்ளை சீமானைப் பெற்றெடுத்த தந்தை திரு.செந்தமிழன் அவர்களின் மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.@SeemanOfficial@NaamTamilarOrg

பாரதிராஜா.

— Bharathiraja (@offBharathiraja) May 13, 2021

முக்கிய அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!

இடம்: அரணையூர்

— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) May 13, 2021

More News

சென்னை வந்ததும் ரஜினிகாந்த் செய்த முதல் பணி: வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது

கமல் கட்சியில் இருந்து விலகும் பிரபலங்கள்: என்ன ஆகும் கட்சியின் எதிர்காலம்?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் சமீபத்தில் விலகிய நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் விலகியுள்ளது பெரும் பரபரப்பை

16 வயது சிறுமியின் ரொமான்ஸ் வீடியோ: குழந்தைகள் நல அலுவலகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

சமூக வலைதளங்களில் ரொமான்ஸ் வீடியோ வெளியிட்ட 16 வயது சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

காண்டம் பரிசோதனையாளர் கேரக்டரில் சூர்யா-கார்த்தி பட நாயகி!

சூர்யா மற்றும் கார்த்தி நடித்த படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் காண்டம் பரிசோதனையாளர் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.1 கோடி, முதல்வரான பின் ரூ.25 லட்சமா? ஸ்டாலினுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

கொரோனாவால் உயிரிழக்கும் முன்கள பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி தரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூறிய ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் 25 லட்சம் மட்டுமே