கமல்ஹாசன் - சீமான் திடீர் சந்திப்பு

  • IndiaGlitz, [Tuesday,February 20 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் நாளை புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள கடந்த சில நாட்களாக அவர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் தனது நெருங்கிய நண்பர்களையும் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.

ஏற்கனவே ரஜினிகாந்த், விஜயகாந்த், நல்லக்கண்ணு, கருணாநிதி, அர்ஜூன் சம்பத் உள்பட பல தலைவர்களை கமல்ஹாசன் சந்தித்துள்ள நிலையில் சற்றுமுன்னர்  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். இந்த சந்திப்பும் வழக்கம்போல் மரியாதை நிமித்த சந்திப்பாக இருந்ததாக கூறப்படுகிறது

சீமான் சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறியபோது, சீமானுக்கு என்னை தெரியும், எனது சினிமவை தெரியும். ஆனால் என்னுடைய கொள்கை என்னவென்று அவருக்கு தெரியாது. அதை தெரிந்து புரிந்த பிறகு தான் அவர் என்னுடன் இணைந்து பணி புரிவதா வேண்டாமா என முடிவுசெய்வார். அதற்கு நேரம் கொடுங்கள். அவர் வந்தது வாழ்த்த, நீங்க திசை திருப்பாதீர்கள். என்று கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து சீமான் கூறியபோது, 'அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தேன் தமிழகம் மிக மோசமான சூழலில் உள்ள நிலையில், மாற்றத்தை கொண்டுவர நடிகர் கமல் அரசியல் பயணத்தை தொடங்குகிறார்' என்று கூறினார்