பகலவன் - கோபம்: இயக்குனர் சீமானின் அடுத்தகட்ட 2 திட்டங்கள்

  • IndiaGlitz, [Thursday,April 06 2017]

பிரபல இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், கடந்த சில வருடங்களாக முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2008ஆம் ஆண்டு 'வாழ்த்துக்கள்' படத்தை இயக்கிய அவர் தற்போது மீண்டும் 9 வருடங்களுக்கு பின்னர் இயக்குனர் துறைக்கு ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடிக்கும் 'பகலவன்' படத்தை அவர் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதே நேரத்தில் அவர் இன்னொரு படத்தையும் இயக்கவுள்ளதாகவும், இந்த படம் ஒரு அரசியல் த்ரில்லர் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 'கோபம்' என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஹாட்டாக இருந்தாலும் ஹேப்பியாக இருக்கின்றேன். விஜய் பட நாயகி நித்யாமேனன்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக இந்த படத்தின் நாயகி நித்யாமேனன் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் சென்றடைந்தார்...

50 மாணவர்களுக்கு திருக்குறள். சென்னை ஐகோர்ட் நீதிபதி வழங்கிய வித்தியாசமான தீர்ப்பு

சென்னை ஐகோர்ட் நீதிபதி ஒருவர் சமீபத்தில் குற்றவாளி ஒருவருக்கு கருவேல மரங்களை அழிக்கும் தண்டனை கொடுத்த நிலையில் இன்னொரு தீர்ப்பில் 50 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

14 நிமிடங்களில் ரெடியான போட்டோபிளக்ஸ். தல ரசிகர்களின் கெத்து

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டாவது ஸ்டில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது...

அஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவில் கிடைத்த சர்ப்ரைஸ்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்து படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளனர். மேலும் சென்னையில் ஒரு குழு இந்த படத்தின் டீசரை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது...

'விவேகம்' படத்தில் அஜித் கேரக்டரின் பெயர்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் நடித்து வரும் 'விவேகம்' திரைப்படம் இன்னும் ஒருசில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது...