நடிகர் சங்க தேர்தல்: யாருக்கு ஆதரவு என்பதை தெரிவித்த சீமான்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதவுள்ளன.

இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நாடக நடிகர்களின் ஆதரவை பெற இரு அணியினர்களும் தீவிர முயற்சியில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இரு அணியை சேர்ந்த வேட்பாளர்களும் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்டனர்.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், தனது ஆதரவை பாக்யராஜ் அணிக்கு அளித்துள்ளார். நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று சீமான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சீமான், பாக்யராஜ் இருவருமே இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது