close
Choose your channels

'சீமராஜா' டிரைலர்-பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, July 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' வெற்றிக்கூட்டணியில் இருந்த சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் டி.இமான் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 25ஆம் தேதியும், ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் பிரமாண்டமாக பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீசும் செய்யவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மதுரை சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.