close
Choose your channels
U Turn

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா: சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்

Wednesday, August 29, 2018 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். எனவே சிவகார்த்திகேயனின் மற்ற படங்கள் போலவே இந்த படமும் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'சீமராஜா' திரைப்படம் 158 நிமிடங்கள்  ஓடும் படமாக ஆக உள்ளது. அதாவது 2 மணி நேரம் 38 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும். ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான கச்சிதமான ரன்னிங் டைமை இந்த படம் பெற்றுள்ளது. மேலும் சென்சார் சான்றிதழ் பெற்றதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 13 என அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

24ஏம் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'சீமராஜா திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.