15 நாட்களுக்கு முன்பே தியேட்டரில் பேனர். 'சீமராஜா'வுக்கு சிறப்பான புரமோஷன்

  • IndiaGlitz, [Tuesday,August 28 2018]

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் 15 தினங்களுக்கும் மேல் இருக்கும் நிலையில் இப்போதே சென்னையில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகப்பெரிய பேனர்களை வைக்க தொடங்கிவிட்டனர்.

இன்னும் இரண்டு வாரங்களில் 'இமைக்கா நொடிகள்' உள்பட வேறு சில படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் 'சீமராஜா'வுக்கு சிறப்பான புரமோஷன்களை படக்குழுவினர்களும் ரசிகர்களும் ஆரம்பித்துவிட்டனர்.

அஜித், விஜய் படங்களுக்கு அடுத்தபடியாக பெரும் எதிர்பார்ப்பும், மாஸ் ஓப்பனிங் வ்சூலும் கடந்த சில வருடங்களாக சிவகார்த்திகேயனின் படங்களில் கிடைத்து வருவதால் விநியோகிஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் சிவகார்த்திகேயனின் படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினிமுருகன்' என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த கூட்டணியில் உருவான படம் 'சீமராஜா' என்பதால் இந்த படத்திற்கு மிகபெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் அடுத்த படத்தில் மீண்டும் பாலிவுட் வில்லன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் நானா படேகர் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது, அவருக்கும் நாட்டுக்கும் நல்லது: சு.ப.வீரபாண்டியன்

கடந்த 1996ஆம் ஆண்டு ரஜினியின் ஒரே ஒரு பேட்டி ஒரு ஆட்சியையே மாற்றிய நிலையில் அவரே நேரடி அரசியல் குதித்தால் ஆட்சியை பிடிப்பது நிச்சயம் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்

பாலாஜிக்கு நித்யா எழுதிய அதிர்ச்சி கடிதம்

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வீட்டில் இருந்து ஒரு பரிசும் கடிதமும் வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா உள்பட ஒருசிலரின் கடிதங்களும், பரிசுகளும் வந்தன

ஹனிமூனில் இருந்து தப்பித்து வந்த நடிகையின் கணவர்

ஹனிமூன் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு பயணமாக இருக்கும். ஆனால் 'மின்சார கனவு' படத்தின் நாயகி கஜோலின் கணவரோ, ஹனிமூனின் பாதியில் இருந்தே தப்பித்து ஓடி வந்த கதை

'சர்கார்' படப்பிடிப்பை முடித்தார் தளபதி விஜய்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வந்த அரசியல் த்ரில் படமான 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது