அடிப்படை மனித குணம் கூட இல்லாதவர்: சீனுராமசாமியின் குற்றச்சாட்டுக்கு மனிஷா யாதவ் பதிலடி..

  • IndiaGlitz, [Monday,November 27 2023]

இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் மனிஷா யாதவ் பிரச்சனை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் சீனு ராமசாமியின் குற்றச்சாட்டுக்கு மனிஷா யாதவ் பதிலளித்துள்ளார்.

பிரபல ஆங்கில ஊடகம் சீனு ராமசாமி மற்றும் மனிஷா யாதவ் ஆகிய இருவரிடமும் பேட்டி எடுத்து பதிவு செய்துள்ளது. இந்த பேட்டியில் ’இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் நானும் மனிஷாவும் வெவ்வேறு ஹோட்டல்களில் தான் தங்கி இருந்தோம். அந்த படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தனர்.. கிராமத்து நாயகி ஆக மனிஷா சரி வர மாட்டார் என்பதால் விஜய் சேதுபதிக்கு பதில் விஷ்ணு விஷாலின் கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க சொன்னேன். ஆனால் அவர் தனக்கு அந்த கேரக்டர் தான் வேண்டும் என்று கூறினார். அதனால் அவரை படத்தில் இருந்து நீக்கினேன். அந்த கோபம் காரணமாக என் மீது பழி போட்டிருக்கிறார் என்று கூறினார்

இதனை அடுத்து ’எனது புதிய படத்தில் ஒரு வழக்கறிஞர் கேரக்டர் உள்ளதாகவும் அதில் நடிக்க விரும்புகிறார்களா என்று மனிஷாவுடன் கேட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனு ராமசாமியின் குற்றச்சாட்டுக்கு மனிஷா யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். தன்னிடம் சீனி ராமசாமி நேரடியாக புதிய படத்தில் நடிக்க போனில் பேசவில்லை என்றும் அவருடைய அலுவலகத்திலிருந்து தனக்கு புதிய படத்தில் நடிக்க விரும்புகிறீர்களா என்ன கேட்டபோது என்னால் முடியாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.

‘இடம்பொருள் ஏவல்’ படத்தின் போது அவர் நடந்து கொண்ட விதம் மோசமாக இருந்ததால் அவருடைய படத்தில் மீண்டும் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன் என்றும் அதுமட்டுமின்றி எனக்கு நடிக்க தெரியாது என திரை உலகினர்களிடம் பொய் தகவலை பரப்பியதாக என்றும் அவர் தெரிவித்தார்.

‘ஒரு குப்பை கதை’ பட நிகழ்ச்சியில் மேடை நாகரிகத்திற்காக அவருக்கு நன்றி கூறினேன் என்றும் அவர் கூறினார். மேலும் அடிப்படை மனித குணம் கூட இல்லாத ஒரு மனிதர் மீது எனக்கு எந்த மதிப்பும் இல்லை என்றும் நான் நல்ல கணவர் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றும் மனிஷா யாதவ் தெரிவித்தார்.

More News

நிக்சன் கேப்டன் பதவி பறிப்பு? நேரடி நாமினேஷன்? மாயா-பூர்ணிமாவின் பலே திட்டம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 56 நாட்கள் முடிவடைந்து இன்று 57 வது நாள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் சில திடீர் திருப்பங்கள் இந்த வாரம் ஏற்பட்டுள்ளது.

'பருத்திவீரன்' படப்பிடிப்பின் போது என்ன நடந்தது? இயக்குனர் பொன்வண்ணன் கூறிய உண்மைகள்..!

கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான 'பருத்திவீரன்' திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான நிலையில்  இந்த படம் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது

'விடுதலை 2' படத்தில் இணையும் புதிய கேரக்டர்கள்.. இன்னும் தாமதமாக வாய்ப்பு?

 வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' படம் கடந்த  மார்ச் மாதம் வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமீர் எப்படிப்பட்டவர்? சுதா கொங்கராவின் பதிவு வைரல்..!

15 வருடங்களுக்கு முன் வெளியான 'பருத்தி வீரன்' திரைப்படம் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வரும் நிலையில் இந்த படத்தில் சம்பந்தப்பட்ட மற்றும்  திரை உலகினர் பலர்

நரி, விஷ பாட்டில், மிக்சர் , கிரிஞ்ச் யார் யார்? உள்ளே வந்தவுடன் அனன்யா கொடுத்த பட்டங்கள்..!

பிக் பாஸ் வீட்டிற்கு எக்ஸ் போட்டியாளர்கள் மீண்டும் வர இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விஜய் வர்மா வந்தார் என்பதும், அவர் ஒவ்வொரு போட்டியாளரின் வீக் பாயிண்டுகளை கூறி