close
Choose your channels

வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்த அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்!

Tuesday, January 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தொடர் வெற்றியை பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு இந்நிறுவனம் தயாரித்த எல்கேஜி, தேவி2, கோமாளி, பப்பி, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது ஜீவா நடித்த ‘சீறு’, மிர்ச்சி சிவா நடித்த சுமோ, நயன் தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன்’ உள்பட ஒருசில படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படங்களில் ஒன்றான ’சீறு’ திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் சென்சாரில் ’யு ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தை பிப்ரவரி 7ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜீவா, நவ்தீப், ரியா சுமன், சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த ‘றெக்க’ படத்தை இயக்கியுள்ளார். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்திர்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.