close
Choose your channels

இன்று முதல் தினமும் 6 மணிக்கு... விஜய்சேதுபதி முக்கிய அறிவிப்பு

Wednesday, November 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஜய்சேதுபதி நடித்த 'சீதக்காதி' திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி இளமை மற்றும் முதுமை தோற்றத்திற்காக கடுமையாக மெனக்கெட்டிருக்கின்றார். எனவே இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களில் கேரக்டர்கள் இன்று முதல் தினமும் 6 மணிக்கு வெளியாகும் என விஜய்சேதுபதி அறிவித்துள்ளார். அந்த வகையில் இன்றைய முதல் அறிவிப்பாக விஜய்சேதுபதி, 'அய்யா ஆதிமூலம்' என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி, அர்ச்சனா, மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை 'பாஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.