விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தில் இணைந்த மேலும் இரண்டு பிரபலங்கள்!

  • IndiaGlitz, [Monday,January 23 2023]

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் இணைந்து வரும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன

சமீபத்தில் இந்த படத்தில் மலேசிய நடிகர் டிஎஸ்ஜி என்பவர் இணைந்தார் என்பதும் அதுமட்டுமின்றி பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது வந்துள்ள தகவல்படி பிரபல இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக தெரிகிறது.

விஜய்யின் ’பீஸ்ட்’ மற்றும் ‘சாணிக்காகிதம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த செல்வராகவன் ‘பகாசூரன்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ’மார்க் ஆண்டனி’ படத்தில் இணைந்துள்ள செல்வராகவன், தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் மட்டுமின்றி நடிகை அபிநயாவும் ’மார்க் ஆண்டனி’படத்தில் இணைந்துள்ளதாக சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த படத்தில் ஏற்கனவே விஷால், ரிதுவர்மா, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை வினோத்குமார் என்பவர் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அறம் எங்கே செல்லுபடியாகும் என யோசித்து... கமல்ஹாசனின் டுவிட்!

அறம் எங்கே செல்லுபடியாகும் என யோசித்து.. என்று தொடங்கும் ட்விட்டை உலக நாயகன் கமல்ஹாசன் பதிவு செய்துள்ள நிலையில் இந்த ட்விட் தற்போது வைரல் ஆகி வருகிறது. 

கவுண்டமணியின் காமெடி வசனமான டைட்டில்.. சந்தானம் அடுத்த படத்தின் அறிவிப்பு!

 சந்தானம் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான சற்றுமுன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பொங்கல் ரிலீஸ் சக்சஸ் மீட்: 62 வயது நடிகருடன் மது அருந்திய இளம் நடிகை!

 பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் 62 வயது நடிகர் உடன் இணைந்து இளம் நடிகை ஒருவர் மது அருந்திய புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

என்னை விமர்சனம் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை.. நயன்தாரா பட இயக்குனரின் ஆவேச பதிவு!

நயன்தாரா நடித்த திரைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனரை ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர். இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள

கவின் நடித்த 'டாடா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவின் நடித்த 'டாடா'  திரைப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி