close
Choose your channels

செல்வராகவன் - கீர்த்தி சுரேஷின் 'சாணிக்காகிதம்' ரிலீஸ் எப்போது?

Friday, January 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

பிரபல இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, சுதா கொங்கரா ஆகியோர்களுடன் பணிபுரிந்த அருள் மாதேஸ்வரன் என்பவர் ‘சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் முக்கிய கேரக்டரிலும் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் ‘சாணிக்காகிதம்’ திரைப்படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது இந்த படம் அமேசான் ஓடிடியில் ஏப்ரல் மாதம் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்த முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.