close
Choose your channels

செல்வராகவனா இது? பயங்கர தோற்றத்தில் 'பகாசூரன்' ஃபர்ஸ்ட்லுக்!

Tuesday, June 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் செல்வராகவன் இயக்குனராக மட்டுமின்றி சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக ’சாணிக்காகிதம்’ மற்றும் ’பீஸ்ட்’ ஆகிய படங்களில் அவரது நடிப்பு மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் நடித்து வரும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் செல்வராகவன், இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பகாசூரன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அடைந்துள்ளனர். செல்வராகவன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நட்டி நட்ராஜ் முக்கிய வேடத்தில் வரும் இந்த படம் சாம் சிஎஸ் இசையில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.