'இது வேற விளையாட்டு': செல்வராகவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆன போதிலும் இந்த படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் நாயகன் எஸ்ஜே சூர்யா தனது டுவிட்டரில் இந்த படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் அவர் ராமசாமி என்ற கேரக்டரில் நடித்துள்ள நிலையில் ’பெரிய திரையில் ராமசாமியை நீங்கள் மார்ச் 5ஆம் தேதி பார்க்கலாம்’ என்றும் ’இது வேற விளையாட்டு’ என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்த படம் செல்வராகவனின் வெற்றிப் பட்டியலில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஷப் பாம்புக்கே தாகம் தீர்த்த அசால்ட் மனிதர்… வைரல் வீடியோ!

4 அடி பாம்பை பார்த்துவிட்டால் 4 கிலோ மீட்டர் தூரம் ஓடும் மனிதர்களுக்கு மத்தியில் ஒருவர்

கிரிக்கெட் விளையாட போன இடத்தில் ட்ரோன் கேமராவுடன் விளையாடிய இந்திய வீரர்? வைரல் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார் ரிஷப் பண்ட். இவர் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்ல,

அகமதாபாத் மைதானத்தில் அதானியும் ரிலையன்ஸும்? வைரலாகும் பெயர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்து உள்ளார்.

'த்ரிஷ்யம்' திரைப்படத்தின் கதை சொந்த அனுபவமா? இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம்

மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ’த்ரிஷ்யம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஆறு ஆண்டுகள் கழித்து ’த்ரிஷ்யம் 2’ திரைப்படம்

ஷங்கரின் அடுத்த படத்தில் தென்கொரிய நடிகை தான் நாயகியா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் திரைப்படம் என்றாலே நட்சத்திர தேர்வு முதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வரை வித்தியாசங்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் ராம்சரண்தேஜா