close
Choose your channels

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் செல்வராகவன்.. என்ன கேரக்டர்?

Saturday, March 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்ஜே பாலாஜி நடித்த ’வீட்ல விசேஷம்’ மற்றும் ’ரன் பேபி ரன்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் செல்வராகவன் கடந்த சில வருடங்களாக படங்கள் இயக்குவதை விட படங்களில் நடிப்பதில் விருப்பம் கொண்டுள்ளார். விஜய் நடித்த ’பீஸ்ட்’ உள்பட ஒரு சில படங்களை நடித்த அவர், சமீபத்தில் வெளியான ’பகாசூரன்’ திரைப்படம் அவரது நடிப்பிற்கு நல்ல விமர்சனத்தை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் செல்வராகவன் நடித்து வருவதாகவும், ஆனால் இந்த படத்தில் அவருக்கு வில்லன் வேடம் இல்லை என்றும் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான வேடம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கருணாஸ், யோகி பாபு உட்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ’சொர்க்கவாசல்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது..

இந்த படத்தின் படப்பிடிப்பு 37 நாட்களாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.