close
Choose your channels

செல்வராகவன் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு: மாஸ் போஸ்டர் வைரல்!

Friday, August 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவனின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டதோடு மாஸ் போஸ்டர் ஒன்றும் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகிவரும் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒருபக்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன், மோகன் ஜி இயக்கத்தில் ’பகாசூரன்’ என்ற படத்தில் நடித்து வந்தார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் ’பகாசூரன்’ படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த அறிவிப்பு ஒரு மாஸ் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் செல்வராகவன் சட்டை அணியாமல் ருத்ராட்ச மாலைகள் மற்றும் நெற்றியில் பட்டை குங்குமத்துடன் ஆவேசமாக காட்சி அளிப்பது போல் உள்ளது.

செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.