close
Choose your channels

குழந்தையோடு குழந்தையாக மாறிய செல்வராகவன்.. என்ன செய்றார் பாருங்க.. வைரல் வீடியோ..!

Sunday, June 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர் செல்வராகவன் தனது மகனுடன் விளையாடும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தையோடு குழந்தையாக விளையாடும் அந்த வீடியோவை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர் என்ற பெயர் பெற்ற செல்வராகவன் ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து அவர் ’காதல் கொண்டேன்’ ’7ஜி ரெயின்போ காலனி’ ’புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கினார் என்பதும் சமீபத்தில் அவரது இயக்கத்தில் உருவான ’நானே வருவேன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

மேலும் விஜய்யின் ‘பீஸ்ட்’ உள்பட ஒரு சில படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும், தற்போது அவர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செல்வராகவன் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில் அவர் தனது மகனுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். குழந்தையோடு குழந்தையாக மாறிய அவருடைய இந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

இயக்குனர் செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.