என் தாய் எங்களுக்கு  சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம்: செல்வராகவன் உருக்கமான டுவீட்!

தமிழ் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன்பின்னர் ’காதல் கொண்டேன்’ ’7ஜி ரெயின்போ காலனி’ ’புதுப்பேட்டை’ உள்ளிட்ட ஒரு சில வெற்றிப் படங்களை அவர் இயக்கினார். கடந்த 2013 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கிய ’இரண்டாம் உலகம்’ என்ற திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து 6 ஆண்டுகளாக செல்வராகவன் இயக்கத்தில் எந்த திரைப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டுதான் சூர்யாவின் ’என்ஜிகே’ திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரே ஒரு தோல்விக்கு பின் திரையுலகில் பல சோதனைகளை சந்தித்த செல்வராகவன் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் எழுந்து வந்து உள்ளார். தனுஷ் நடிக்க உள்ள இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து செல்வராகவன் இயக்கவுள்ளார் என்பதும் அது மட்டுமின்றி ’சாணிகாகிதம்’ என்ற திரைப்படத்தில் அவர் நடிகராக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து அவர் கூறியபோது ’என் தாய் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முக்கிய பாடம் எந்த சூழ்நிலை வந்தாலும் கலங்கக் கூடாது என்றும், இங்கே எதுவும் நிரந்தரமல்ல என்பதும், அதுவே கடந்து போகும் என்பதுதான் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். செல்வராகவனின் இந்த டுவிட் தற்போது வைரல் ஆகிவருகிறது.