close
Choose your channels

செல்வராகவனின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்

Saturday, December 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ’என்ஜிகே’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ’மன்னவன் வந்தானடி’ ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னரே தயார் ஆகியும் இன்னும் வெளிவராமல் உள்ளன

எஸ்ஜே சூர்யா மற்றும் ரெஜினா நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தையும் சந்தானம் நடித்த ’மன்னவன் வந்தானடி’ திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய ஒரு சில முயற்சிகள் எடுத்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் விரைவில் ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துளது. இதனையடுத்து விரைவில் வெளியீடு என்ற வாசகம் கொண்ட போஸ்டர்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா, பாபி சிம்ஹா, பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ் மதன் மற்றும் கவுதம் மேனன் இணைந்து தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் கடந்த 2016ஆம் ஆண்டே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.