close
Choose your channels

Sema Review

Review by IndiaGlitz [ Friday, May 25, 2018 • தமிழ் ]
Sema Review
Banner:
Linga Bhairavi Creations, Pasanga Productions
Cast:
G.V.Praksh Kumar, Arthana, Yogi Babu, Kovai Sarala, Mansoor Ali Khan
Direction:
Vallikanth
Production:
Pandiraj, Ravichandran
Music:
G.V.Praksh Kumar
Movie:
Sema

செம்ம  -  ஜாலியாக ஒரு டைம்பாஸ் 

கொஞ்சம் சறுக்கல்களை தொடர்ந்து சந்தித்து வந்த ஜி வி பிரகாஷ் குமார் இம்முறை பாண்டிராஜின் சிஷ்யர் வள்ளி காந்த் துணை கொண்டு ஒரு ஜாலியான டைம் பாஸ் படத்தை தந்து வெற்றிக்கு அச்ச்சாரம்  போட்டிருக்கிறார் என்றால் மிகையாகாது. 

ஜி வி பிரகாஷ் தன் நண்பர் யோகி பாபுவுடன் சேர்ந்து திருச்சி அருகில் இருக்கும் ஒரு டவுன் பகுதியில் பழம் காய் கரி மற்றும் மீன் விற்பவர். இவர் தாய் சுஜாதா விஜயகுமார் இவருக்கு பல பெண்களை பார்த்து அனைவருமே இவரை வேண்டாம் என்கிறார்கள். ஜி வி பிரகாஷ் காயத்ரி என்ற பெண்ணை மூன்று வருடங்கள் துரத்தி துரத்தி காதலித்தும் அவர் ஏற்க மறுக்கிறார். இதற்கிடையில் ஒரு ஜோசியர் இன்னும் மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்யவில்லையென்றால் ஆறு வருடங்கள் தள்ளி போகும் என்று கூறி விட காயத்ரியிடமே சென்று கெஞ்ச அவர் இவர்களை உதாசீனப்படுத்தி அனுப்புகிறாள். பின் ஒரு வழியாக அட்டாக் பாலு என்கிற மன்சூர் அலி கான் கோவை சரளா தம்பதியரின் மகள் அர்த்தனா பினுவை பார்க்க போக இருவருக்கும் பிடித்து விடுகிறது. பூமுடிப்பு நடக்க இரண்டு நாட்கள் இருக்கும் பொது அந்த ரொம்ப நாளாக ஆர்த்தன மீது ஒரு தலை காதல் கொண்ட ஊர் எம்.எல்.ஏ மகன் மன்சூர் அலி கானை கூப்பிட்டு தனக்கு பெண்ணை தந்தால் அவருடைய , மொத்த கடனையும் அடைத்து விடுவதாக உறுதி கூறுகிறான் அவரும் சம்மதித்து விட விஷயத்தை கேள்வி பட்ட ஹீரோவின் அம்மா தற்கொலை செய்ய செல்ல இத்தனையும் தாண்டி ஜி வி பி தான் விரும்பிய பெண்ணை மணந்தாரா இல்லையா என்பதே மீதி திரை கதை 

குழந்தையென்ற ஊர்ப்பையன் வேடத்துக்கு அபாரமாக பொருந்தி விடுகிறார் ஜி வி பிரகாஷ் தன்னுடைய வழக்கமான கையை ஆட்டி பெண்களை கீழ்த்தரமாக பக்கம் பக்கமாக வசனம் பேசும் பாணியை கைவிட்டதற்கு அவருக்கு நாம் கை குலுக்குவோம். யோகி பாபுவுடன் செய்யும் காமடி தாயிடம் செண்டிமெண்ட் காதலியிடம் மிகையில்லா ரொமான்ஸ் என்று ஒரு எதார்த்த ஹீரோவாக வளம் வந்து கவர்கிறார். அர்த்தனா பின்னு அழகாக இருக்கிறார் அளவாக பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். யோகி பாபு சாதாரணமாக பேசும் வசனத்துக்கே தியர் கை தட்டுகிறது என்றால் அவர் பேசும் சரவெடி கவுண்டர்களுக்கு சொல்லவே வேண்டாம் கொண்டாடுகிறார்கள். அட்டாக் பாலுவாக வரும் மன்சூர் அலி கான் வரும் காட்சிகளிலெல்லாம் கலகலப்பூட்டுகிறார் குறிப்பாக கிளைமாக்ஸிஸ் அதிரடியும் செய்து லேசாக கண் கலங்கவும் வைத்துவிடுகிறார். சுஜாதா விஜயகுமார் ஹீரோவின் தாயாக பண்பட்ட நடிப்பை தருகிறார் அதே போல் அடக்கி வாசித்திருக்கும் கோவை சரளாவும் மனதில் பதிகிறார். 

படத்தின் மிக பெரிய பலம் ஒரு இடத்தில கூட முகம் சுளிக்க வைக்காத குடும்பத்துடன் பார்க்கும்படியாக படமாக வந்திருப்பது. கதை பழசென்றாலும் கலகலவென அமைந்த திரை கதை ஜோர். அதே போல் பாண்டிராஜின் அந்த எதார்த்த உரையாடல்கள் கேட்க மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஜி வி பி யை வைத்து தண்ணீர் தராத கர்நாடகத்தையும் ஒரு இடத்தில வாரியிருக்கிறார். அந்த வில்லன் அனுப்பும் டப்ஸ்மாஷ் மெசேஜ்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. 

படத்தின் மைனஸ் என்று பார்த்தல் இரண்டாம் பாதியில் சறுக்கல் ஏற்பட்டு திரைக்கதை சற்று நொண்டி அடிக்க ஆரம்பித்து விடுகிறது. நிஜத்தில் நடந்த கதை என்பதால் நிறைய லாஜிக் ஓட்டைகளும் தாண்டி செல்ல வேண்டியிருக்கிறது. 

நடிப்பில் எப்படியோ அதே போல் இசையிலும் அசத்தியிருக்கிறார் ஜி. வி.பி அணைத்து பாடல்களுமே இனிமை குறிப்பாக சண்டாளி காட்சி படுத்திய விதமும் சிறப்பு.   விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு மற்றும் பிரதீப் ராகவின் படத்தொகுப்பு இரண்டும் செம்ம தரம். இயக்குனர் வள்ளிகாந்த் தன் குருநாதர் பாண்டிராஜ் பாணியிலேயே ஒரு கலகலப்பான படத்தை தந்து பெயரை தட்டி செல்கிறார். எங்கிட்ட மோததே என்ற சமீபத்திய படத்தின் இயக்குனர் ராமு செல்லப்பா வாழ்க்கையில் நிஜமாக நடந்த கதையை சற்றும் சுவாரசியம் குறையாமல் தந்ததற்கு ஒரு செம்ம வாழ்த்து சொல்லலாம்.

ஆர்ப்பாட்டமில்லாத அதே சமையம் கலகலப்பாக வந்திருக்கும் இந்த செம்ம படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். 

Rating: 3 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE