'செம்பருத்தி' சீரியல் நடிகருக்கு பெண் குழந்தை: வர்ணித்து எழுதிய கவிதை வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,September 27 2022]

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று செம்பருத்தி என்பதும் இந்த தொடர் லட்சக்கணக்கான ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவர் தனது மகளுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதிய கவிதை வைரலாகி வருகிறது.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக கார்த்திக், ஷபானா, பிரியாராமன் உள்ளிட்டோர் இந்த சீரியலில் தங்கள் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த சீரியலில் அருண் என்ற கேரக்டரில் அதாவது ஆதியின் சகோதரராக நடித்திருந்தவர் விஜே கதிர். இவர் ஆண்டு ஜூலை மாதம் சிந்து என்பவரை திருமணம் செய்த நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் தனது மகளுக்காக எழுதிய கவிதை வைரலாகி வருகிறது. அந்த கவிதை இதோ:

ஆயிரம் உறவு என்னை அழைத்தாலும்
அப்பா என்ற ஒற்றை வார்த்தையில்
என்னை கட்டி இழுக்க வந்த
ஆசைமகளே
ஆயுள் முழுவதும் உந்தன் முழுமதி முகத்தில்
மலரும் புன்னகை கண்டே
எந்தன் நாட்கள் நகர வேண்டுமடி வைரமே

இந்த பதிவில் விஜே கதிர் மேலும் கூறியபோது, ‘என் இளவரசி! இன்று மகள்கள் தினத்தை கொண்டாடும் ஒவ்வொரு தந்தைக்கும் வாழ்த்துக்கள். நானும் என் மகளுடன் மகள்கள் தினத்தை கொண்டாடுகிறேன். ஆம்...,எங்கள் வீட்டிற்கு அழகான இளவரசி வந்துள்ளார். அவர் எங்கள் வீட்டை அலங்கரித்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

வளைச்சு வளைச்சு புதிய படங்களை வாங்கும் நெட்பிளிக்ஸ்: அடுத்த படம் என்ன தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களின் படங்களை அமேசான், ஹாட்ஸ்டார், ஜீ தமிழ் ஆகிய ஓடிடி நிறுவனங்கள் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென நெட்பிளிக்ஸ்

'பொன்னியின் செல்வன்': 10 முக்கிய கேரக்டர்களும், அதில் நடித்த நட்சத்திரங்களும்..

அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மணிரத்னம் இயக்கி உள்ள நிலையில் முதல் பாகம் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. 

'பொன்னியின் செல்வன்' படத்தில் உள்ள தவறு.. சுட்டிக்காட்டிய இலங்கை தமிழ் ரசிகர்!

'பொன்னியின் செல்வன்'  படத்தில் உள்ள தவறை இலங்கை தமிழ் ரசிகர் ஒருவர் சுட்டிக் காட்டி உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

'மாமன்னன்' படத்தை அடுத்து மாரி செல்வராஜின் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்!

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

சிம்பு, கெளதம் மேனனை அடுத்து கூல் சுரேஷூக்கும் கிஃப்ட் கொடுத்த ஐசரி கணேஷ்!

 சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அதனை கொண்டாடும் வகையில் சிம்புவுக்கு சொகுசு காரும் கௌதம் மேனனுக்கு இருசக்கர வாகனமும் பரிசு கொடுத்த