ஜிவி பிரகாஷின் 'செம' திரை முன்னோட்டம்

  • IndiaGlitz, [Tuesday,May 22 2018]

ஜிவி பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான 'செம' வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷின் இந்த படம் குறித்த முன்னோட்டட்தை தற்போது பார்ப்போம்

பிரபல இயக்குனர்பாண்டிராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அவரது உதவி இயக்குனர் வள்ளிகாந்த் இயக்கியுள்ளார். இயக்குனர் வள்ளிகாந்தின் நண்பர் ஒருவர் திருமணம் செய்வதற்காக சந்தித்த நகைச்சுவையான அனுபவங்களை கதையாக உருவாக்கி பாண்டிராஜிடம் கூற அவருக்கு மிகவும் பிடித்துவிடவே இப்படம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், அர்த்தனா பினு, யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி ஜிவி பிரகாஷ் இசையும் அமைத்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைத்தது குறித்து அவர் கூறியபோது, 'வெயில்', 'ஆடுகளம்', 'கொம்பன்' படங்களுக்குப் பிறகு என்னிடமிருந்து கிராமத்து இசையில் உருவான பாடல்கள் தான் இந்த 'செம' ட்ராக் லிஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த படத்தின் டீசரில் பொண்ணு பார்க்கப் போகும் ஜிவி பிரகாஷின் அனுபவங்கள் மற்றும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்பது சமூக வலைத்தளங்களில் பதிவான கருத்துக்களில் இருந்து தெரிய வந்தது. மேலும் இந்த டீசரில் நாயகியை பெண் பார்க்க வரும் ஜிவி பிரகாஷ் தன்னுடைய அம்மாவிடம் 'இந்த பொண்ணும் என்னை ரிஜக்ட் செய்துவிடுமா? என்று கேட்க, இவ்வளவு அழகான பொண்ணு ரிஜக்ட் செஞ்சாலும் தப்பில்லை, நம்ம குடும்பத்துக்கு பெருமைதான் என்று கூறும் காமெடி வசனம் அனைவரையும் கவர்ந்தது.

டீசர், டிரைலரில் அனைவரையும் கவர்ந்த இந்த படத்தின் திரைவிமர்சனத்தை வரும் வெள்ளியன்று பார்ப்போம்

More News

மே 25 ரிலீசில் இருந்து விலகிய அடுத்த திரைப்படம்

இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜிவி பிரகாஷின் 'செம', அதர்வாவின் 'செம போத ஆகாதே', பரத் நடித்த 'பொட்டு', தன்ஷிகாவின் 'காலக்கூத்து' உள்பட 11 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி மீது போலீஸ் சரமாரி தாக்குதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜடேஜா. இவருடைய மனைவி ரிவபா நேற்று தனது காரில் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார்.

ஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் "எல் கே ஜி".

தன்னுடைய நேர்மையான, அதிரடியான கருத்துக்கள் மூலமாகவும், சமூக சிந்தனைகள் நிறைந்த செயல்களாலும் குறுகிய காலத்தில் இளைஞர்கள் இடையே பெரும் பெயரும் புகழும்  பெற்ற ஆர் ஜே பாலாஜி

கமல், ரஜினியை அடுத்து அரசியல் களமிறங்கும் விஜய்

தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப வழக்கம்போல் கோலிவுட் திரையுலகினர் முயற்சித்து வருகின்றனர்.

நல்ல படம், ஆனா பாக்கத்தான் ஆளில்லை: 'செயல்' விளம்பரம்

தளபதி விஜய் நடித்த 'ஷாஜஹான்' படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அப்புலு நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கிய படம் 'செயல்'. இந்த படம் கடந்த வெள்ளியன்று