பிக்பாஸ் சீசன் 5ல் இந்த குணசித்திர நடிகருமா?

பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டு இருப்பதை பார்த்து வருகிறோம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் கனி, பவித்ரா, சுனிதா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதேபோல் நடிகர்கள் ராதாரவி, மன்சூர் அலிகான் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இனியன், பிளாக் ஷீப்ஸ் யூடியூப் சேனலின் ஆர்ஜே வினோத் உள்பட ஒரு சிலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சீனியர் குணச்சித்திர நடிகரான எம்எஸ் பாஸ்கரிடம் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சீனியர் நடிகர் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் சீனியர் நடிகர் எம் எஸ் பாஸ்கரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

More News

வெற்றிமாறன் - சூரி படத்தின் டைட்டில் இதுவா? 

'அசுரன்' படத்தை இயக்கியதற்காக சமீபத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் விஜய்சேதுபதி

தேர்தல் பிரச்சாரம்: 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வானதி ஸ்ரீனிவாசனுடன் நடனமாடிய பிரபல நடிகை!

தேர்தல் பிரச்சாரத்தின்போது கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் உடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு பிரபல நடிகை ஒருவர் நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 4ஐ மிஸ் செய்த இவர், சீசன் 5ல் கலந்து கொள்வாரா?

பிக்பாஸ் சீசன் 4ஐ மிஸ் செய்த பிரபலம் ஒருவர் பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் சிம்பு படம்: ரசிகர்கள் மகிழ்ச்சி

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான 'ஈஸ்வரன்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது என்பதும் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியான மறுநாளில் தான் சிம்புவின் 'ஈஸ்வரன்'

திமுக காவி உடுத்தவும் தயங்காது? கடுமையாக விமர்சிக்கும் அரசியல் வீடியோ!

சமூக நீதி கொள்கையைக் கொண்டு இருக்கும் திமுக மறைந்த தலைவர் கருணாநிதிக்கு பிறகு தனது கொள்கையில் பிடிப்புடன் இருக்கிறதா? என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பி வருகின்றனர்.