தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்… யார் இந்த சண்முகச்சுந்தரம்?

  • IndiaGlitz, [Wednesday,May 12 2021]

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று மே 7 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அதையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ.இறையன்பு புதிதாக நியமிக்கப்பட்டார். முதல்வரின் தனிச் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார்.

இப்படி புதிய அரசாங்கத்தில் இடம்பெற்ற அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் மக்களுக்கு நன்கு தெரிந்த நபர்களாகவே உள்ளனர் இந்நிலையில் முந்தைய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய் நாராயணன் தேர்தல் முடிவு வெளியான மே 2 ஆம் தேதியே தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த மே 9 ஆம் தேதி புதிய தலைமை அரசு வழக்கறிஞராக ஆர்.சண்முகச் சுந்தரத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் நியமனம் செய்தார்.

இந்நிலையில் யார் இந்த சண்முகச்சுந்தரம் என்று பலரும் ஆர்வத்தை கிளப்பி வருகின்றனர். இவர் ஒரு வழக்கறிஞர் மட்டும் அல்ல, கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் நின்று வெற்றிப்பெற்று 2008 ஆம் ஆண்டு வரை எம்.பியாக இருந்தவர். அதோடு கடந்த 1991-96 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தின் போது பலமுறை கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டு ஊர் அறிந்த வக்கீலாக மாறினார். இந்நிலையில் வழக்கறிஞராக இருந்த சண்முகச்சுந்தரம் எம்.பியாக இருந்து தற்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப் பட்டுள்ளார்.

1953 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த இவர் தன்னுடைய சட்டப்படிப்பை முடித்தவுடன் தந்தையிடமே பயிற்சி பெறுகிறார். காரணம் இவரின் தந்தை எஸ்.ராஜகோபாலான் மிகப்பெரிய கிரிமினல் வழக்கறிஞராகவும் சிபிஐயின் சிறப்பு வழக்கறிஞராகவும் இருந்தவர். பின்பு 1977 வாக்கில் மூத்த வழக்கறிஞர் நடராஜன் என்பவரிடம் பயிற்சி பெறுகிறார். இப்படி துவங்கிய இவருடைய வழக்கறிஞர் வாழ்க்கை ஜெயலலிதாவிற்கு எதிராக டான்சி நில ஊழல் வழக்கில் திமுக சார்பில் ஆஜராகிறார். இதனால் 1955 ஆம் ஆண்டு மே மாதம் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு படுகாயம் அடைகிறார்.

படுகாயம் அடைந்த இவர் பல மாதங்கள் மருத்துவமனையிலேயே இருந்து எப்படியோ உயிர் தப்புகிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்டு வெல்டிங் குமார் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கிறது. அடுத்து ஜெயலலிதாவின் மீது பளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, லண்டன் ஹோட்டல் வழக்கு எனப் பிரபலமான வழக்குகளில் ஆஜராகிறார். அதோடு ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் ஜெயின் கமிஷன் முன்பு ஆஜராகி வாதாடுகிறார். மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் பேரறிவாளனை பரோலில் அனுப்பக் கோரியும் பலமுறை வாதாடுகிறார்.

இப்படி திமுக சார்பில் பல முக்கிய வழக்குகளில் இடம்பெற்ற இவர் கடந்த 1996-2001 ஆம் ஆண்டு திமுகவிற்கு குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். இந்நிலையில் 40 ஆண்டுகாலம் வழக்கறிஞராக பணியாற்றி இவர் கடந்த 2002-2008 வரை எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப் படுகிறார். தற்போது தமிழக அரசின் தலைமை அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

40 ஆண்டுகால வழக்கறிஞர் அனுபவம், பலமுறை கெலைவெறித் தாக்குதல், எம்.பி பதவி, முக்கிய வழக்குகளில் ஆழம் கண்டவர் எனப் பன்முகங்களைக் கொண்ட ஆர்.சண்முகச்சுந்தரம் தற்போது அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

More News

சிவாஜியின் தோல்வியை விட கமல் தோல்வி பெரிது அல்ல: சாருஹாசன்

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு கமல்ஹாசன் தோல்வி அடைந்தார். இந்த தோல்வி குறித்து அவருடைய சகோதரர் சாருஹாசன் ஊடகம் ஒன்றுக்கு

சமீபத்தில் பிறந்த மகனுடன் செல்வராகவன்: வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்

உதயநிதிக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்‌: வெங்கட்பிரபு உருக்கமான அறிக்கை!

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு அவர்களின் தாயாரும் இசையமைப்பாளர்-இயக்குனர் கங்கைஅமரன் அவர்களின் மனைவியுமான மணிமேகலை என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 'கில்லி' பட நடிகர்: 

தமிழ் திரையுலகில் கடந்த சில நாட்களாகவே பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவது திரையுலக பிரபலங்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்: எந்தெந்த கடைகள் திறக்கலாம்?

தமிழகத்தில் நேற்று முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு காலத்தில் காலை 6 மணி முதல் 12 மணிவரை மளிகை, பால், காய்கறி கடைகள் மட்டும் திறக்கலாம்