close
Choose your channels

'கான்ஜூரிங் 2' படம் பார்த்த முதியவர் அதிர்ச்சியில் மரணம்.

Friday, June 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் வெளியான 'கான்ஜூரிங் 2' திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் திகிலூட்டுவதாக இருப்பதால் இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் இந்தப் படம் ஓடி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை திருவண்ணாமலையில் உள்ள ஒரு தியேட்டரில் பார்த்த 60 வயது நபர் ஒருவர் அதிர்ச்சியில் திரையரங்கிலேயே இறந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மரணம் அடைந்த நபர் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும், இதுவரை அவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை என்றும் திருவண்ணாமலையில் உள்ள ஆஷ்ரமித்தில் அவர் தங்கியிருந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.