'குழந்தைகள் முன்னேற்ற கழகம்': செந்தில் உடன் சேர்ந்து யோகிபாபு ஆரம்பித்த அரசியல் கட்சி..!

  • IndiaGlitz, [Monday,March 25 2024]

நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புதிது இல்லை என்பதும் மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல் தளபதி விஜய் வரை பலர் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளனர் என்பது தெரிந்தது.

அந்த வகையில் காமெடி நடிகர்களான செந்தில் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் ’குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த டைட்டிலில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர் என்ற விளம்பரம் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தேர்தல் நேரத்தில் திடீரென யோகி பாபு மற்றும் செந்தில் இணைந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ’குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ என்ற டைட்டில் இருப்பதை பார்த்து இது உண்மையில் திரைப்படமா? அல்லது அரசியல் கட்சி ஆரம்பமா? என்று யோசிக்கும் அளவுக்கு படக்குழுவினர் இந்த போஸ்டரை வடிவமைத்துள்ளனர்

இந்த படத்தை சங்கர் தயால் என்பவர் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த ’சகுனி’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் அந்த படமும் அரசியல் கலந்த காமெடி படம் என்பது தெரிந்தது

இந்த படத்தின் போஸ்டரின் பின்னணியில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் இருப்பதை பார்க்கும்போது நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த அரசியல் படம் என தெரிகிறது. மேலும் செந்தில், யோகிபாபு அரசியல் பிரமுகர்களாக இந்த படத்தில் நடித்துள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுவது போன்ற காட்சிகளும் இந்த படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

லோகேஷ் கனகராஜ் படம் இயக்குவதை விட்டுவிடலாம்.. என்ன ஒரு கெமிஸ்ட்ரி.. 'இனிமேல்' ஆல்பம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற இடத்தை பிடித்துள்ள லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து நடித்த 'இனிமேல்' என்ற ஆல்பம் வெளியாகி உள்ள

தமிழகத்தின் ஸ்டார் தொகுதி: மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் - வினோத் பி.செல்வம்..!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக

இப்படியெல்லாம் பேசினால் எப்படி பெண்கள் இந்த துறையில் சாதிப்பார்கள் ?

நான் வேறு ஒருவரின் பட்டத்தை ஒன்றும் பறிக்கவில்லை.என் திறமையை என்னால் முடிந்த வரை காட்டி தான் இந்த பட்டத்தைப் பெற்றேன்.இதற்காக பெருமை படுகிறேன்........

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: மீன ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் 2024 குரோதி வருடம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி கணித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: கும்ப ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் 2024 குரோதி வருடம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை கணித்துள்ளார்.