காமெடி நடிகர் செந்தில் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,August 21 2017]

தமிழ் திரையுலகில் சுமார் 40 ஆண்டுகாலமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் செந்தில் ஒருசில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் செந்தில் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
மெட்ரோ' பட நாயகன் சிரிஷ் நடிக்கும் அடுத்த படமான 'பிஸ்தா' படத்தில் செந்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை சிரிஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் செந்தில் மட்டுமின்றி காமெடி நடிகர் சதீஷும் இந்த படத்தில் இணணந்திருப்பதாக சிரிஷ் தெரிவித்துள்ளார்.
'மெட்ரோ' படத்தின் எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கும் இந்த படத்தில் மிருதுளா முரளி மற்றும் அருந்ததி நாயர் ஆகிய இரண்டு நாயகிகளும், நமோ நாராயணன், சுவாமி நாதன், யோகிபாபு, செண்ட்ராயன் உள்பட பலரும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு இசையமைக்கும் தரண் அவர்களுக்கு இது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விஐபி 2' படத்தை பார்த்த டிரைவரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை

தனுஷ், நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

சிறைக்கு வெளியே சசிகலா சென்றதற்கான புதிய வீடியோ ஆதாரம்: பெரும் பரபரப்பு

பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக தண்டனை அனுபவித்து வரும் சசிகலா மற்றும் இளவரசி சிறையில் இருந்து வெளியே சென்று ஷாப்பிங் செய்ததாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் பரவியதோடு, ஒருசில வீடியோக்களும் வெளியாகின.

'விஐபி 2', 'தரமணி' படங்களில் 2வது வார வசூல் நிலவரம்

இந்த வாரம் வியாழன் அன்று அஜித்தின் 'விவேகம்' வெளிவரவுள்ளதை அடுத்து கடந்த வெள்ளியன்று எந்த தமிழ்ப்படமும் வெளியாகவில்லை.

எதிரிகள் இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும். 'மெர்சல்' விழாவில் விஜய்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. முதல்முறையாக தனியார் தொலைக்காட்சி, யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர், போன்றவைகளில் ஒரு திரைப்படத்தின் ஆடியோ விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் கோடிக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

உலகின் மிகச்சிறந்த CM விஜய் என டிரம்ப் டுவீட் செய்வார்: பார்த்திபன்

தளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது வெகுபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல் நபராக நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பேசினார்...