close
Choose your channels

என் பாடல்களில் ஆபாசமா? புஷ்பவனம் குப்புசாமிக்கு செந்தில் பதிலடி!

Friday, May 10, 2019 • தமிழ் Comments

ஒரே துறையில் பிரபலமாக இருப்பவர்களிடையே போட்டியும் பொறாமையும் ஏற்படுவது உலகம் முழுவதும் உள்ள ஒரு வழக்கமான நிலை ஆகும். அந்த வகையில் நாட்டுப்புற பாடல்களில் புகழ்பெற்ற புஷ்பவனம் குப்புசாமி, தற்போது டிவியிலும் சினிமாவிலும் புகழ்பெற்று வரும் செந்தில்-ராஜலட்சுமி தம்பதிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர் இரட்டை அர்த்த பாடல்களை மேடையில் பாடுவதாகவும் குறிப்பாக செந்தில் மனைவியை பக்கத்தில் வைத்து கொண்டே இன்னொரு பெண்ணிடம் ஆபாச சைகையில் ஈடுபடுவதாகவும், இதையெல்லாம் பார்க்கும்போது இனிமேல் பாடுவதையே நிறுத்திவிடலாம் போல் தெரிகிறது என்றும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

புஷ்பவனம் குப்புசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள செந்தில், 'பாடல்களில் இரட்டை அர்த்தம் இல்லாத பாடல்களே இல்லை என்றும், எங்கள் மூத்த கலைஞர்கள் பாடிய பாடல்களைத்தான் நாங்கள் பாடி வருகிறோம் என்றும், ஒருவேளை அதில் ஆபாச வார்த்தைகள் இருந்தால் அந்த் வார்த்தைகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு வார்த்தைகளை மாற்றித்தான் பாடி வருகிறோம்' என்று கூறியுள்ளார். 

Get Breaking News Alerts From IndiaGlitz