close
Choose your channels

செப்டம்பர் 28 ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகிய திரைப்படம்.. என்ன காரணம்?

Wednesday, September 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செப்டம்பர் 28ஆம் தேதி ஐந்து திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

வரும் செப்டம்பர் 28ஆம் தேதி ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ’இறைவன்’ ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடித்த ’சந்திரமுகி 2’ சித்தார்த் நடித்த ’சித்தா’ ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ மற்றும் விஜய் ஆண்டனி நடித்த ’ரத்தம்’ ஆகிய ஐந்து திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபேஷன் ஸ்டுடியோ தயாரித்த ’இறைவன்’ திரைப்படம் அதே தேதியில் வெளியாவதால் ’பார்க்கிங்’ ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது. இந்த படத்தின் புதிய ரிலீஸ் செய்து பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ’இறைவன்’, ’சந்திரமுகி 2’, ’சித்தா’ மற்றும் ’ரத்தம்’ ஆகிய நான்கு திரைப்படங்கள் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதில் ஏதாவது ஒரு படம் இன்னும் வெளியேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment