மொழிவாரி சிறுபான்மையினர் முன்னேற்றம்… தனி நிறுவனம் அமைத்து தமிழக அரசு அதிரடி!

  • IndiaGlitz, [Tuesday,February 23 2021]

அதிமுக எப்போதும் சிறுபான்மையினர் நலனுக்காகவே செயல்படும் என்றும் ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக இயங்காது என்றும் தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். அந்த வகையில் தற்போது மொழிவாரி சிறுபான்மையினர் முன்னேற்றத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட தமிழக அரசு புது ஆணை ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.

அதில் மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனம் ஒன்று உருவாக்கி அதன்மூலம் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்து உள்ளார். இதற்காக Tamilnadu Lingustic Minorities Social and Economics Development Corporation – TALMEDCO என்ற அமைப்பை தமிழக முதல்வர் ஏற்படுத்தி உள்ளார்.

பன்மைத்துவம் கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒரு மாநிலத்தை விட்டு மற்ற மாநிலங்களில் வாழும் மொழியினர் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதன் முறையாக மொழிவாரி சிறுமைபான்மையினர் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு தனி நிறுவனம் ஒன்றை தமிழக முதல்வர் ஏற்படுத்தி உள்ளார்.

இதன் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்திடவும், தொழில் முனைவோர்களாக ஊக்கப்படுத்தவும் தொழில் தொடங்கிட கடன் உதவி வழங்கிடவும் இந்த நிறுவனம் வழி வகை செய்யும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. தேசிய சிறுபான்மையினர் முன்னேற்றம் மற்றும் நிதி கழகத்தின் வழிகாட்டுதலின்படி மொழிவாரி சிறுபான்மையினருக்கு கடன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்த மொழிவாரி சிறுபான்மையினர் நல நிறுவனம் செயல்படும் என்றும் தமிழக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More News

ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் டேவிட் வார்னருக்கு இப்படியொரு சிக்கலா?

14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது

தாய் செல்போன் தராததால் 6 ஆம் வகுப்பு மாணவன் செய்த விபரீதம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே தாய் செல்போன் தராததால் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுமணத் தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு? மண்டபமே கலகலப்பான சம்பவம்!

இந்திய வரலாற்றில் முதன் முறையாக பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ எட்டவுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

கிடுகிடுவென வளர்ந்துவிட்ட நடிகை ரீமாசென் மகன்: வைரல் புகைப்படம்!

'மின்னலே' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த 'பகவதி' விக்ரம் நடித்த 'தூள்' விஷால் நடித்த 'செல்லமே' சிம்பு நடித்த 'வல்லவன்' படங்களில் நடித்தவர் நடிகை ரீமாசென்

விஜய்யுடன் நடித்த பேபி நட்சத்திரமா இவர்? வைரல் புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடித்த திரைப்படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒருவரின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது