close
Choose your channels

முனிஷ்ராஜாவின் புது பிசினஸ், ரூ.50 லட்சத்தில் சொந்த வீடு.. ராஜ்கிரண் சொன்னது பொய்யா

Tuesday, September 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீரியல் நடிகர் முனிஷ்ராஜா பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத்தை திருமணம் செய்து கொண்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு ஒன்றில் ஜீனத் தனது வளர்ப்பு மகள் என்றும் சொந்த மகள் கிடையாது என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி முனீஸ் ராஜா பணத்துக்காக எதையும் செய்யும் மட்டமான புத்தி உள்ளவர் என்றும் அவரை திருமணம் செய்ய வேண்டாம் என ஜீனத்திடம் தான் கேட்டுக்கொண்டும் அவர் கேட்கவில்லை என்றும் என தெரிவித்தார். மேலும் முனீஸ் ராஜா மற்றும் ஜீனத் ஆகியோருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முனீஸ் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் விரைவில் புது பிசினஸ் ஒன்றை தொடங்க இருப்பதாகவும் அந்த பிசினஸ் தொடக்க விழாவில் அனைவரும் வந்து கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தனது மனைவிக்காக சொந்த ஊரில் 50 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டிக் கொண்டு இருப்பதாகவும் அந்த வீட்டின் கிரக பிரவேசம் விரைவில் நடைபெறும் என்றும் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் சொந்தபந்தங்கள் அனைவரையும் கூட்டி விழா நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் ராஜ்கிரண் பணத்திற்காக முனீஸ்ராஜா எதையும் செய்வார் என்று கூறியுள்ள நிலையில் இன்னொரு பக்கம் முனிஸ் ராஜா தனது மனைவிக்கு 50 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டிக் கொடுத்து இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.