close
Choose your channels

கர்ப்பமாக இருக்கும்போது அண்டர்வாட்டர் போட்டோஷூட் எடுத்த நடிகை!

Friday, July 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று ’பாரதி கண்ணம்மா’ என்பதும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சீரியலிலல் வெண்பா என்ற வில்லி கேரக்டரில் நடித்த ஃபரினாவின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டு குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ஃபரினா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார் என்பதும், அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர் வயிற்றில் மெஹந்தி பதிவு செய்து எடுத்த புகைப்படங்கள் வேற லெவலில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்தகட்டமாக நடிகை ஃபரினா மீண்டும் ஒரு வித்தியாசமான போட்டோஷூட் எடுத்துள்ளார். கர்ப்பமான நேரத்தில் அவர் நீச்சல் குளத்தில் அண்டர்வாட்டரில் இருப்பது போன்ற ஒரு போட்டோ ஷூட் எடுக்கப்பட்டுள்ளதாம். இந்த அண்டர்வாட்டர் போட்டோ ஷூட் மிக விரைவில் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எப்போது வரும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.