ஒரே ஒரு தப்பு செய்ததால் ஏற்பட்ட விபரீதம்: தமிழ் சீரியல் நடிகையின் கண்ணீர் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,September 25 2022]

ஒரே ஒரு தப்பு செய்ததால் தனக்கு ஏற்பட்ட விபரீதம் குறித்து சீரியல் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

’சரவணன் மீனாட்சி’ ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘எனது மொபைல் எண்ணுக்கு மெஸேஜ் ஒன்று வந்தது என்றும் அதில் உங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் லக்கி மணி கிடைத்திருக்கிறது என்றும் கூறப்பட்டிருந்தது. அந்த லிங்கை நான் கிளிக் செய்தவுடன் ஒரு செயலி தானாகவே டவுன்லோட் ஆகிவிட்டது என்றும் அதற்கு அடுத்த ஒரு சில நிமிடங்களில் போன் ஹேங் ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில நாட்கள் கழித்து நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் லோன் வாங்கி இருக்கிறீர்கள் உடனே கட்ட வேண்டுமென வாய்ஸ் மெசேஜ் வந்தது என்றும் அந்த பணத்தை கட்டவில்லை என்றால் உங்கள் காண்டாக்ட் நம்பர்களுக்கு உங்கள் புகைப்படங்களை அனுப்புவோம் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

அப்போதுதான் தனக்கு விஷயம் சீரியஸ் என புரிந்து சைபர் கிரைமில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் தனது புகைப்படங்களை மோசமாக ஆபாச முறையில் மார்பிங் செய்து தனது நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும் அதனால் தற்போது அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன்ப் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே உங்கள் போனுக்கு லக்கி மணி என்று மெசேஜ் வந்தால் தயவுசெய்து எந்த செயலியையும் டவுன்லோட் செய்து விடாதீர்கள் என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

More News

'பொன்னியின் செல்வன்' நட்சத்திரங்களுக்கு எவ்வளவு சம்பளம்? அதிக சம்பளம் யாருக்கு தெரியுமா?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

நேற்று லாஸ் வேகாஸ், இன்று ஹாலிவுட்: உலக அளவில் புரமோஷன் செய்யும் பொன்னியின் செல்வன்' டீம்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ஓடிடி ரிலீஸ் உரிமை இத்தனை கோடியா? இதுவரை இல்லாத உச்சம்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் அதற்குள் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போன வாரம் கருப்பு, இந்த வாரம் வெள்ளை. மீண்டும் உள்ளாடையுடன் ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவை கிட்டத்தட்ட அனைத்துமே கிளாமர்

நடிகர் போண்டாமணி சிகிச்சைக்கு தனுஷ் உதவி: எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

காமெடி நடிகர் போண்டாமணி இரு சிறுநீரகங்களும் செயலிழந்து தற்போது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.