என் கணவருக்கு நான் தான் கொள்ளி வச்சேன்: தமிழ் சீரியல் நடிகை

  • IndiaGlitz, [Sunday,July 11 2021]

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது கணவருக்கு தானே கொள்ளி வைத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல சீரியல் நடிகை ராகவியின் கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகே திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தனது கணவரின் மரணம் குறித்தும், அவருடன் வாழ்ந்தது குறித்தும் நடிகை ராகவி கூறியதாவது:

எட்டு வருடம் காதலித்து அதன்பின் பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடந்தது என்றும் 13 ஆண்டுகள் நாங்கள் சந்தோசமாக வாழ்ந்து இருக்கிறோம் என்றும், அப்படிப்பட்ட நிலையில் திடீரென வெளியூர் சென்று விட்டு வருகிறேன் என்று போனவர் திரும்பவில்லை என்றும் திடீரென ஒரு போன் வந்து உங்கள் கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானதும் நான் உடைந்து போய் விட்டேன் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

என்னுடைய சகோதரி மற்றும் அம்மா இல்லை என்றால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று எனக்கே தெரியாது என்றும், உன்னுடைய மகளுடைய வாழ்க்கைக்காக நீ வாழ்ந்த ஆகவேண்டும் என்று அம்மா எனக்கு ஆறுதல் கூறியதால் தான் நான் ஓரளவு மீண்டு வந்துள்ளேன் என்றும் நடிகை ராகவி தெரிவித்துள்ளார்.

என்னுடைய கணவர் எனது மகளை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதேபோல வளர்க்க திட்டமிட்டு உள்ளேன் என்றும் குறிப்பாக எனது மகளை ஒரு விளையாட்டு வீராங்கனையாக்க வேண்டும் என்பதே அவரது கனவு என்றும் அதை நான் தற்போது நிறைவேற்றி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

தனது கணவருக்கு தானே தான் கொள்ளி வைத்ததாகவும் அவருக்கு காசி செல்ல வேண்டும் என்று ஆசை இருந்ததால் அவருடைய இறுதிச் சடங்குகளை காசிக்குப் போய் செய்து வந்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பொழுது வரை என்னுடைய கணவரின் மரணத்திற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை என்றும் ஒருவேளை அவருடைய மரணத்திற்கு வேறு யாராவது காரணம் இருந்தால் அவர்கள் கடவுளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் அந்த பேட்டியில் நடிகை ராகவி தெரிவித்தார்.

More News

நடிகை ஸ்ரேயாவை ஏமாற்றிய கணவர்: வைரல் வீடியோ

நடிகை ஸ்ரேயாவை அவருடைய கணவர் ஏமாற்றிய வீடியோ ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது 

2 குழந்தை பெற்றுக் கொண்டால் அரசுபணி கிடையாதா? சர்ச்சையைக் கிளப்பும் புது சட்டம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆட்சிக்காலம் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்

பிரபல நடிகரும், தெலுங்கு இயக்குநருமான மகேஷ் காத்தி இன்று உயிரிழந்தார்.

தெலுங்கு திரையுலகில் திரைப்பட விமர்சகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என பல் திறமைகள் கொண்டவராக விளங்கி வந்தவர் தான் மகேஷ் காத்தி

டுவிட்டரில் அதிரும் கொங்குநாடு....! தமிழகம் 2- ஆக பிரிவது சாத்தியமா...?

டுவிட்டரில்  கொங்குநாடு என்ற தலைப்பில் ஹேஸ்டேக்குகள் வைரலாகி வருகின்றன. திமுக மற்றும் பாஜக அரசுகளை கலாய்த்தும்  நெட்டிசன்கள் டுவிட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை முடித்துவிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்