close
Choose your channels

உங்களை விட உங்க அம்மா சூப்பர்: ஷிவானிக்கு நெட்டிசன்ஸ் அனுப்பிய மீம்ஸ்

Tuesday, July 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சிகளில் புகழ் பெற்று வரும் நடிகர் நடிகைகள் பலர் பெரிய திரையிலும் என்ட்ரி ஆகி நல்ல வாய்ப்புகளை பெற்று வருகின்றார்கள் என்பது தெரிந்ததே. சிவகார்த்திகேயன், சந்தானம் முதல் பல நடிகர்களும், பிரியா பவானிசங்கர், வாணிபோஜன் உள்பட ஒரு சில நடிகைகளும் தொலைக்காட்சியிலிருந்து திரையுலகிற்கு வந்து புகழ் பெற்று உள்ளார்கள்

இந்த நிலையில் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி நடிகையாக இருக்கும் ஷிவானி நாராயணன் விரைவில் பெரிய திரைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் திரையுலகிற்கு வந்தால் நயன்தாராவையே பின்னுக்கு தள்ளிவிடுவார் என்று அவரது ரசிகர்கள் அவ்வப்போது மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா விடுமுறையில் ஷிவானி நாராயணன் பல கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியே வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் இருப்பதால் அவரது ஒவ்வொரு புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஷிவானியின் அம்மா அகிலா நாராயாணன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களுக்கும் தற்போது ரசிகர்களின் வரவேற்பு கிடைத்துள்ளது மட்டுமின்றி ஷிவானியிடமே ’உங்களைவிட உங்க அம்மா போஸ்ட் சூப்பர்’ என்ற மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த மீம்ஸ்களை ஷிவானியே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.