தமிழத்திற்கு புதிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!!

 

பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு தமிழகத்தில் புதிய ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா நேரத்திலும் சித்த மருத்துவ முறைகள் மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கை ஏற்படுத்தும் மருத்துவ முறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் சித்த மருத்துவ ஆராயச்சி நிறுவனத்தை தமிழகத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதப் பிரதமரான நரேந்திர மோடியாகிய உங்களின்கீழ் உள்ள இந்திய அரசு சித்த மருத்துவ முறைக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அதாவது சித்த, ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி அத்துடன் ஹோமியோபதி ஆகியவற்றிற்கு புதிய ஆராய்ச்சி நிறுவனங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

சித்தாவின் அகில இந்திய நிறுவனம் அமைப்பதற்கு நான் இந்திய அரசுக்கு நன்றி கூற விரும்புகிறேன். இந்த முன்முயற்சிக்காவும் அகில இந்திய நிறுவனத்தை நிறுவவும் கேட்டுக் கொள்கிறோம். நடப்பு நிதியாண்டிலேயே தமிழ்நாட்டில் சித்தா மருத்துவமனையை நிறுவ வேண்டும். இது பொருத்தமாக இருக்கும். சித்த மருத்துவ ஆராயச்சி நிறுவனங்களுக்கான முன்னோடியாக தமிழகத்தில் ஒரு நிறுவனம் அமைய வேண்டும். சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு தமிழகம்தான் சிறந்த இடம். அதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் முதல்வர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், இந்த நிறுவனத்திற்கு தேவையான நல்ல நிலம், நல்ல காற்று, ரயில் மற்றும் சாலை இணைப்புடன் கூடிய வசதி தமிழகத்தில் உள்ளது. ஏற்கனவே சென்னை நகரத்திற்கு அருகில் இதற்கான இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நான் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். இந்திய அரசுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் வழங்கவும் ஏற்கனவே மாநில அரசால் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில் அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனம் (இன்ஸ்டிடியூட்) நிறுவப்படுவதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அதற்கு தமிழ்நாடு சாதகமான இடமாக இருக்கும் எனத் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையில் வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தின்கீழ் மானிய திட்டங்களை அறிவித்து உள்ளது.

விவசாயத்திற்குப் பயன்படும் டிராக்டர், அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் கட்டும் கருவி, பவர் டிரில்லர், கொத்துக் கலப்பை, இறகு கலப்பை, களை எடுக்கும் கருவி, தெளிப்பான் கருவி, குழி தோண்டும் கருவி போன்ற பல கருவிகளுக்கு மானியத்தொகை அறிவிக்கப் பட்டுள்ளது என்பதையும் முதல்வர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.