சேதுபதி' சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Tuesday,February 09 2016]
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் உள்ள விஜய்சேதுபதி நடித்த 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தணிக்கை செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதை பார்த்தோம். இந்நிலையில் அவர் நடித்த மற்றொரு படமான 'சேதுபதி' படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

சேதுபதி' படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். விறுவிறுப்பான போலீஸ் திரைக்கதையை கொண்ட இந்த படம் 2 மணி நேரம் மற்றும் ஒரு நிமிடம் ஓடுகிறது. சேதுபதி' திரைப்படம் தணிக்கையில் 'யூ' பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் இரண்டாவது முறையாக ஜோடி சேரும் இந்த படத்தை எஸ்.யூ. அருண்குமார் இயக்கியுள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் உருவான இந்த படத்தை வான்சன் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

மலேசியா அருகில் உள்ள தீவில் 'கபாலி' டீம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் 'கபாலி' படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது என்பதை...

'நவரசதிலகம்' சென்சார் விபரங்கள் மற்றும் ரிலீஸ் தேதி

தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து நடிகராக மாறியுமா.கா.பா ஆனந்த் கதாநாயகனாக நடித்து வந்த 'நவரச திலகம்' என்ற திரைப்படம்...

SPI சினிமாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து. விஷால் அறிவிப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது விஷால் தலைமையிலான அணியினர்...

பிப்ரவரி 10-ஆம் தேதி விஜய் தந்தையின் ஃபாரின் கார் ரிலீஸ்

விஜய் நடித்த 'தெறி' படத்தின் டீசர் கடந்த 5ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதையும் தெறிக்க வைத்த நிலையில் வரும் 10ஆம் ...

ஹிருத்திக் ரோஷனின் அடுத்த படத்தில் கவுதம் மேனன் நாயகி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் பூஜாஹெக்டேவுடன் இணைந்து Mohenjo Daro என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்...