லோகேஷ் கனகராஜ் உடன் பணியாற்றிய 7 இயக்குனர்கள்: 'லியோ' படத்தின் ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள நிலையில் இந்த படத்தில் 7 இயக்குனர்கள் பணி புரிந்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் ஆகிய ஐந்து இயக்குனர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதேபோல் இந்த படத்தின் திரைக்கதை அமைக்க ரத்தினகுமார் தீரஜ் வைத்தி ஆகிய இரண்டு இயக்குனர்கள் உதவி செய்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது இந்த படத்தில் 7 இயக்குனர்கள் நடிகர்களாகவும் தொழில்நுட்ப பணியில் பணிபுரிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ராசு மதுரவன் இயக்கிய ’மாயாண்டி குடும்பத்தார்’ என்ற திரைப்படத்தில் மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத், தருண் கோபி, ஜி எம் குமார், ரவி மரியா, சிங்கம் புலி, ராஜ்கபூர், நந்தா பெரியசாமி ஆகிய 10 இயக்குனர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் 7 இயக்குனர்கள் பணி புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் 'லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் உரிமையை வாங்கியதா ரெட் ஜெயண்ட் மூவீஸ்?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ

'புரொஜக்ட் கே' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த நாட்டில் ரிலீஸ் தெரியுமா?

இந்திய திரை உலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் திரைப்படம் 'புரொஜக்ட் கே'. பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார்

குழந்தை பெறுவதற்கு சரியான வயது எது? ஆய்வில் வெளியான புது தகவல்!

பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு பாதுகாப்பான வயது எது என்பது குறித்தும் கருவில் குரோமோசோம்

திரையங்கு உரிமையாளர் சங்கம் டிக்கெட் விலை உயர்வு கோரிக்கையை வைக்கவில்லை - திருப்பூர் சுப்ரமணியன்

சினிமா டிக்கெட் விலை உயரப்போவதாக அறிவிப்பு வந்த நிலையில் தமிழ்நாடு திரையங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்களிடம் நேர்காணல் செய்யப்பட்டது.

சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சின்னு நம்பவே இல்ல - மோனிஷா

சமூக வலைத்தள பிரபலமும் நடிகையுமான மோனிஷா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள மாவீரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .